திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகரில் 28.01.23, 29.01.23 அன்று பிரம்மாண்ட கபடி விழாவானது நடத்தப்பட்டது. இந்த கபடி போட்டியானது சனிக்கிழமை மாலை 4 மணியில் அளவில் ஆரம்பிக்கப்பட்டு இரவு முழுவதும் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நடைபெற்று அன்று இரவு 12 மணி வரை இந்த கபடி விழாவானது நடைபெற்றது. இந்த கபடி விழாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட கபடி குழுக்கள் பங்கேற்றன. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த கபடி விழாவை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த விழாவை பார்வையாளர்கள் சுமார் 3000 மேற்பட்டோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த விழாவானது எந்தவித தடங்களும் என்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது . இந்த விழாவை லாரன்ஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார். பாலகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து தலைவர் ரேவதி நாகராஜன் MA அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். பாலமுருகன் வார்டு உறுப்பினர் திமுக ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.


இந்தப் போட்டியில் முதல் பரிசை வக்கம்பட்டி அணி தட்டி சென்றது.முதல் பரிசு ரூபாய் 20,004 மற்றும் வெற்றி கோப்பை கோப்பை ஆகியவற்றை பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் ரேவதி நாகராஜன் அவர்கள் வழங்கினார்.

