திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக அரசு பணிகாலி இடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி
Staff selection commission Multi-Tasking (Non Technical Staff) தேர்வு வாரியத்தின்Advertisement F. No. PP 103/26/2022-PP -1 Selection Posts, Date.18.01.2023- ன் படி அறிவிக்கப்பட்டுள்ள பணிகாலி இடங்களுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு இவ்வலுவலக வளாகத்திலும் மற்றும் ஒட்டன்சத்திரம் கிருத்துவப் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும் 03.02.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது திறன் மிக்க வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள பணிகாலி இடங்களுக்கான போட்டித் தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ச. விசாகன், இ. ஆ. ப., அவர்கள் தெரிவிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here