திண்டுக்கல் மாவட்டம் மறவபட்டி சேர்ந்த அகஸ்டின் ரெஜினா என்ற புனித வள்ளலார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி பால் பாட்மிண்டன் போட்டியில் இந்திய அளவில் சாதனை புரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தெலுங்கானாவில் மாச்ரியல் மாவட்டம் , ஸ்ரீராம்பூர் காலனியில் நடைபெற்ற இந்திய அளவிலான பால்பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்றார். இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழகத்தை சார்பாக ஐந்து அணிகள் பங்கேற்று ஐந்து அணிகளும் பரிசை தட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஆண்கள் அணியில் 10 பேரும் , பெண் மாணவர்கள் அணியில் 10 பேரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட ஐந்து போட்டிகளிலும் ஐந்திலும் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.



இந்தக் குழுவில் பயிற்சியாளர்கள் எழிலரசன், சார்லஸ், முத்துசாமி, கோபி, திருமதி ராஜி, ஆகியோர்கள் இந்த மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள்.
அகஸ்டின் ரெஜினா பெற்றோர்:-
