
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் ஆறாவது நாளான 25.02.2023 சனிக்கிழமை புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 1000 மாணவிகளை கொண்டு சிறப்பு பெருந்திறல் நெகிழி நீக்கப்பணி முள்ளிப்படி பஞ்சாயத்தில் இனிதே நடைபெற்றது.

திருமிகு ராம. செல்வம்., ஐஏஎஸ், இந்திய தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குனர், சென்னை, திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் P. மணிமாறன் அவர்கள்,

தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் மாநில கருத்தாளர், சி .எஸ். ஆல்பர்ட் பெர்னான்டோ அவர்கள், திண்டுக்கல் மாவட்ட முழு சுகாதார இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமாநிதி அவர்கள்,

மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் இவர்களுடன் எமது கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்கள்,

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்கள் ஆகியோர் இணைந்து நெகிழி நீக்கம் குறித்த பெருந்திறல் துப்புரவு பணியை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.