கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு பேரவை மற்றும் பூ கட்டுவோர் பேரவை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆனது திண்டுக்கல் கல்லறைத் தோட்டம், திருச்சி ரோடு அருகே நடைபெற்றது.

இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டி, அனைத்து கிராம கோயில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டி, ஓய்வூதியம் பெரும் பூசாரிகள் மறைவிற்கு பின் அவரது மனைவிக்கு அந்த தொகை வழங்கப்பட வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டது. கிராம கோவில் பூசாரி பேரவை ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, அருள்வாக்கு பேரவையின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.கே சாமி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.அருள் வாக்கு பேரவையின் இணை அமைப்பாளர் ஆறுமுகம், மற்றும் திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் T. சண்முகநாதன் ஆகியோரும் மேலும் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
