
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்த விவசாயி பாண்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம், இன்று காலை 10 மணி அளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு

பி.சண்முகம் அகில இந்திய கிசான் சங்கத்தின்துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் எஸ். நிக்கோலஸ், கே.பி.பெருமாள் மாநில பொருளாளர், N.பெருமாள் மாவட்டத் தலைவர், எம். ராமசாமி மாவட்ட செயலாளர்,ஆர்.தயாளன் மாவட்ட பொருளாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

.இதில் மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் விவசாயி பாண்டி மரணத்திற்கு காரணமான காவலர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,

அவர்களது குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.