திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் மாநிலம் தழுவிய மூன்றாம் கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் என்பதுக்கும் 80 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு சிஐடி யூ வில் இருந்து கணேசன் மாவட்ட தலைவர், அங்கன்வாடி குழுவின் தலைவர் பாரதி, துணைத் தலைவர் மீனா, பொருளாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் பல முக்கிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கு பெற்றனர்.

இந்தக் கூட்டமானது சுமார் மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணி அளவில் நிறைவேறியது. இந்தக் கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்தவும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.