திண்டுக்கல் அபிராமி லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் ரெத்தினம் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் G. T. N கலைக் கல்லூரி கேம்பஸ் லயன்ஸ் சங்கம் 324 B மாவட்ட ஆளுநரின் ஆர்ப்பாட்டமான அதிகாரப்பூர்வ வருகை தின விழா நடைபெற்றது.

இவ்விழாவை ஒருங்கிணைத்தவர் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் திபூர்சியஸ் மற்றும் இவ்விழாவை தலைமை ஏற்றவர்கள் தலைவர் Dr. J. அமலா தேவி, செயலாளர் K. சுப்பிரமணியன் மற்றும் பொருளாளர் K. விஜயலட்சுமி.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட ஆளுநரான T. P. ரவீந்திரன் மற்றும் மாவட்ட முதல் பெண்மணி ஆஷா ரவீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஆளுநருக்கு ஆர்ப்பாட்டமானஅமோக வரவேற்பு, நிர்வாக குழு கூட்டம், ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை – சேவை திட்டங்கள் நிறைவேற்றம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல், கூட்டம் நிறைவு, விருந்து உபசரிப்பு, போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இவ்விழாவில் நாட்டியாஞ்சலிக் குழுவினரின் கண்கவர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.