திண்டுக்கல் மாவட்டம் மேற்குமரியநாதபுரத்தில் மக்கள் மன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஓவிய போட்டி மற்றும் பேச்சுப் போட்டியான நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.





உளவானது மாலை 6:00 மணி அளவில் துவங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் சு.சா.மனோகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .மேலும் எஸ்சி.எஸ்டி பணிக்குழு செயலர் தாமஸ் பீட்டர் அருள் தந்தை மற்றும் தாமஸ் ஜான் பீட்டர் அவர்களும் கலந்து கொண்டனர்.


மேற்கு மேற்குமரியநாதபுர பங்குத்தந்தை ஜெயசீலன் அவர்கள் தலைமை ஏற்று விழாவை நடத்தினார். மேற்கு மரியனாதபுர ஊர் தலைவர் சி.ஜான் போஸ்கோ முன்னிலை வகித்தார். போட்டி சிறப்பாக முடிவதற்கு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தி சிறப்பித்தனர்.
