திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து பாராட்டு விழா மற்றும் ஆசி பெரும் விழாவை ஆயிரம் பிறை கண்ட அற்புத மனிதர் Rtn. Major Donor. G. சுந்தர்ராஜன் அவர்களுக்கு சமர்பித்தனர்.

இந்நிகழ்வானது 26.4.2023 மாலை 6 மணி அளவில், யூனியன் கிளப் மீட்டிங் ஹால் திண்டுக்கல்லில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார்.

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகச் செயலாளர் Rtn. MPHF. S. சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மேலும் SKC.குப்புசாமி கௌரவத் தலைவர் திண்டுக்கல் வர்த்தக சங்கம், Lion. Dr. K. ரத்தினம், அருட்தந்தை மரியநாதன்,அதிபர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மதுரை மற்றும் Lion. Dr. NMB. காஜாமைதீன், தலைவர் திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கண்காணிப்பாளர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவானது இரவு 9.00 மணிக்கு அறுசுவை விருந்தோடு நிறைவு பெற்றது.
