திண்டுக்கல் மதர் தெரசா லையன்ஸ் சங்கம் திண்டுக்கல், கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாமானது மணிக்கூண்டு அருகில் உள்ள புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இதில் ஆயிரம் பிறை கண்ட மாமனிதர் Rtn. Major Donor G. சுந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். அருள் திரு S. அருள்தாஸ் தாளாளர் புனித மரியன்னை ஆரம்பப்பள்ளி, முன்னிலை வகித்தார். மேலும் அவருடன் இணைந்து Rtn. S. சண்முகம், Lions Er. A. முருகானந்தம் வட்டாரத் தலைவர், Lions Er. A. குமார் ஜெம் லயன்ஸ் சங்க தலைவர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்களும், துணை மேயர் ராஜப்பா அவர்களும், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் சந்தன மேரி கீதா அவர்களும், திண்டுக்கல் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். லயன்ஸ் மாவட்ட தலைவர் சாமி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
