நமது நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை பாதுகாத்து ஊக்குவிக்கும் வகையில், உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம் மற்றும் உலக கலைகள் விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து நடத்தும்,இரண்டு மணி நேரத் தொடர் சிலம்பம் போட்டியானது 07.05.2023 ஆன இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டன. பட்டர்பிளை சிலம்பம் அகாடமி மாஸ்டர் கிருத்திகா தேவி தேனி மாவட்டம், மருதாச்சலம் ஏககலைவன் சிலம்பு சூத்திர பாசறை அகாடமி கோவை மாவட்டம், சாமி கண்ணு மாதேஸ்வரன் விளையாட்டு கழகம் கோவை மாவட்டம், போன்ற மாவட்டங்களில் இருந்து மாஸ்டர்களும் கலந்து கொண்டனர்

. பொதுமக்களும் இந்த சிலம்ப விளையாட்டை பார்த்து ரசித்தனர். இந்தப் போட்டி விழாவிற்கு கௌரவ அழைப்பாளராக அழகு பாண்டி சார்பு ஆய்வாளர் வருகைதந்தார்.

ஜெபா மாஸ்டர் உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின் செயலாளர் சிலம்ப விளையாட்டு துவங்கி வைத்தார். இந்த விளையாட்டிற்கு பொருளாளர் பெருமாள் வழக்கறிஞர் முன்னிலை வகித்தார்.

இந்த அமைப்பின் மாநில வழக்கறிஞர் அஜய் ஆகிய முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். விளையாட்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அனைவருக்கும் பதக்கங்களும், அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


