திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை அய்யாபட்டி பொதுமக்கள் திண்டுக்கல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் செயலாளர் திரு. முத்து ரத்தினவேல் தலைமையில் நத்தம் ரவுண்டானம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.

இறுதியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், நத்தம் காவல் நிலைய அதிகாரி ஆய்வாளர் திரு. தங்க முனிசாமி ஜெயந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது என்று வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர்.