தமிழ்நாட்டிலேயே +2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

அவரைப் பள்ளிக்கு நேரில் சென்று, வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் அம்மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் என பலரும் இருந்தன.

மேலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அம்மாணவியின் வீட்டிலேயே நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி தங்க பேனாவை பரிசளித்தார்.
