தேனி மாவட்டம் கம்பம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த இனியவர் என்பவர் 11.05.2023 அன்று சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குற்றத்திற்காக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வழக்கானது மதுரை முதன்மை அமர்வின் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் 12.05.2023 தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளியான இனியவன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.