ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி போட்டியானது வருகின்ற மே மாதம் 18 முதல் 21 வரை தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இது திண்டுக்கல் மாவட்ட அணி கலந்து கொள்ள உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி தேர்வானது திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் கலந்து கொண்டனர்.
இதில் 18 வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களை வழி அனுப்பும் விழாவானது நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க துணை தலைவர் ரமேஷ் பட்டேல் தலைமை தாங்கினார். ஹாக்கி சங்க துணைத் தலைவர் ஞான குரு முன்னிலை வகித்தார். செயலாளர் ராமானுஜம், செயற்குழு உறுப்பினர் பிரிட்டோ ஆகியோர் போட்டிக்கான நிகழ்வுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
