உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு கௌதம் அகாடமி ஆப் மார்சியலார்ஸ் எஸ் ஜி கே அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டி.

இந்த போட்டியானது தேனி மாவட்டம் கடமலைக்குண்டு என்னுமிடத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டிக்கு திண்டுக்கல், திருச்சி,கரூர், சென்னை, சேலம்,கோயம்புத்தூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றன.இதில் 3 வயது குழந்தை முதல் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் பரிசுகளை தட்டி சென்றனர். இந்த போட்டியானது. ஒற்றைக்கம்பு,இரட்டைக் கம்பு,சுருள்வாள் போன்ற ஆயுதங்களை சுற்றி மாணவர்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர் .

மாணவர்கள் அனைவரும் அவரவர்கள் தனி திறமைகளை காட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தனர் . இதைப் பற்றி கேட்டதற்கு அமைப்பின் நிறுவனர் தமிழ் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது எங்கள் நோக்கம் என்றும், இந்தக் கலையை எளிய முறையில் மக்களுக்கு கற்றுத் தருவது எங்கள் லட்சியம் என்றும் கூறினார்.