திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டமானது மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணைமேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் இன்று பூமி பூஜை நடைபெற்றது.

வார்டு எண் 2 ல் செட்டி நாயக்கன்பட்டி பாதையில் சேதமடைந்த பேவர் கற்கள் சாலையை சீரமைத்தல், வார்டு எண் ஐந்தில் மருதாணி குளம், சலவைத்துறை, பிள்ளையார்பாளையம் பகுதிகளில் சேதமடைந்த மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்களை அமைத்தல், வார்டு எண் 6 யல் பாண்டியன் நகர், முதல் பிள்ளையார் பாளையம் வரை சேதமடைந்த பேவர் கற்கள் சாலைகளை சீரமைத்தல், வார்டு எண்8 ல் நாயக்கர் புது தெரு, நாட்டாமைக்காரன் தெரு, அஜிஸ் தெரு மூக்கன் ஆசாரி தெரு, காளிமுத்து பிள்ளை தெரு, சுபேதர் தெரு சேதம் அடைந்த சிறு பாலங்கள் மற்றும் சேதமடைந்த பேவர் கற்கள் சாலைகளை சீரமைத்தல்

வார்டு எண் 23ல் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றம் செய்தல், வார்டு எண் 25-ல் பாறைப்பட்டி மயானத்தில் மினி பவர் பம்ப் அமைத்தல், வார்டு எண்13 இல் நடுத்தெரு, சந்தன கோனார் தெரு, தம்பி கோனார் தெரு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் கட்டுதல், வார்டு எண்19 சுக்கான் மேடு, ஆரோக்கிய மாதா தெரு, தெய்வசிகாமணிபுரம் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைத்தல், வார்டு எண்19 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றம் செய்தல், வார்டு எண் இருபதில் மேற்கு ஆரோக்கிய மாதா தெரு,வி எம் ஆர் பட்டி, ஏ ஆர் நகர், மங்களம் டவர் ரோடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சிறு பாலங்கள் மற்றும் மழை நீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகளுக்காக அந்தந்த பகுதிகளில் பூமி பூஜை நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here