மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பாஜக எம்பி பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய கோரி வாலிபர் மாணவர் மாதர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் மாவட்டம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகர தலைவர் அஜீத் தலைமை தாங்கினார். கீதா, மதுமிதா, தமிழ்செல்வன், சக்திவேல், நிருபன்,வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலாஜி நிர்வாகிகள் ஆனந்த்,
பொன்மதி, சண்முகம் மாணவர் சங்க மாநில துணை தலைவர் சம்சீர் அகமது மாவட்ட தலைவர் முகேஷ் மாதர் சங்க மாநில செயலாளர் ஜி.ராணி ,பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
