திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சி இளம் பருவ குழந்தைகள் சிகிச்சை மையம் பிரிவில் புதிதாக உணர் திறன் பயிற்சி கூடம், உணர்திறன் இருட்டறை ஆகிய பிரிவுகள் காளீஸ்வரி பவுண்டேஷன் நிறுவனத்தினால் பங்களிப்பு செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

உணர்திறன் இருட்டறையில் உள்ள உபகரணங்கள் மனநலம் குன்றிய குழந்தைகள், வளர்ச்சி தாமதக் குழந்தைகள், பார்வை திறன் குறைபாடு குழந்தைகள், பேச்சுத் திறன் குறைபாடு அதியியக்க கோளாறு உடலியக்க குறைபாடு குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உணர்வு திறன் தூண்டுதல், பார்வை திறன் தூண்டுதல், கவனம் ஈர்த்தல், அதிவேகத்தன்மை குறைதல், சமநிலைப்படுத்துதல், பேச்சுத்திறன் தூண்டுதல், உடல் இயக்கம் தூண்டுதல், அமைதிப்படுத்துதல் நடத்தை மாறுபாடு ஆகிய சிகிச்சை முறைகள் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய மருத்துவர், சுகாதாரத் துறை துணை இயக்குனர், குழந்தைகள் நல தலைமை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்கள், DEIC மருத்துவர், பல் மருத்துவர், காளீஸ்வரி பவுண்டேஷன் நிறுவனத்தினர், DEIC பாராமெடிக்கல் ஆரம்ப கால தூண்டுதல் பயிற்சியாளர், சமூக நலப் பணியாளர், சிறப்பு கல்வியாளர், மனநல ஆலோசகர், பிசியோதெரபிஸ்ட், கண் பரிசோதகர், பல் நுட்புநர், ஆய்வக நுட்புநர், DEIC மேனேஜர் தரவு உள்ளீட்டாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயனுள்ள சேவையை பொதுமக்களும் மனநல குறைபாடு உள்ள குழந்தைகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
