தமிழ் தேசிய கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு அருகில் காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.
இதற்கு திண்டுக்கல் புறநகர் மாவட்ட செயலாளர் தங்கையா தலைமை தாங்கினார். தமிழ் தேசிய கட்சியின் தலைவர் தமிழ் நேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்நாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மதுபான கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
மேலும் மாவட்ட மகளிர் அணி தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் செயலாளர் பிரியா, பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜோசப் சந்தியாகு மற்றும் மாநகர் மாவட்ட தலைவர் நிக்கோலஸ் ஆகியோருடன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
