நாமக்கல் மாவட்டம் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனதின் மூலமாக நாமாகிரிபேட்டை நாரைக்கிணறு ஊராட்சியில் G20 உச்சி மாநாடு பற்றிய பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாசன போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். கல்பனா, நிர்வாக செயலாளர் தேசிய மனிதநேய அறகட்டளை வரேற்புரை ஆற்றினார். தனம், நிர்வாக இயக்குனர் தேசிய மனிதநேய அறகட்டளை அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேந்திரன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாரைகிணறு,கண்ணன்
இயக்குநர், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி.வேலு வழக்கறிஞர் எஸ் டி அணி – மாநில செயலாளர்,பிரகாசம் கிழக்கு
ஒன்றிய செயலாளர்,
ராதா எஸ் டி அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 40க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சியை நாமாகிரிபேட்டை நாரைக்கிணறில் உள்ள மக்கள் கல்வி நிறுவன கற்பிப்பாளர்கள் மற்றும் மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.