ஆத்தூர் வட்டாரத்தில் சுமார் 3945 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை உற்பத்தியினை பெருக்கும் வகையிலும், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் தமிழக அரசு மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், குறைந்த உற்பத்தி திறன் மற்றும் நோய் வாய்ப்பட்ட தென்னை மரங்களை வெட்டி விட்டு புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்காக ஒரு தென்னை மரத்திற்கு ரூ.1000 வீதம் மானியம் வழங்கப்பட்டது.

அவ்வாறு நடப்பட்ட தென்னங்கன்றுகளை தென்னை வளர்ச்சி வாரிய முதன்மை தென்னை வளர்ச்சி அலுவலர் முனைவர். ஹனுமந்த கவுடா ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் திருமதி. சித்ரா சென்னை,மண்டல அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் திரு. அறவாழி, வேளாண் விஞ்ஞானி முனைவர், திரு. பாலகும்பகன், வேளாண்மை துணை இயக்குனர்( மத்திய திட்டம் )செ. அமலா, வேளாண்மை உதவி இயக்குனர் சி. நாகேஸ்வரி, ஆத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் ம. விக்னேஸ்வரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
