திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஊராட்சி அளவிளான விழிப்புணர்வு கூட்டம் 18-7-2023 நடைபெற்றது.
திட்ட இயக்குனர் நா.சரவணன் அவர்கள் தலைமையேற்று மகளிர் உரிமைத் தொகையின் அவசியத்தையும், தகுதியுடைய அனைத்து மகளிருக்கும் சென்றடைய வேண்டும் எனவும் சிறப்புரையாற்றினார்.
சுமார் 11 மணியளவில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி வரை கூட்டமான நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




ஊராட்சி மன்ற தலைவர் வே.சுப்பிரமணி, வட்டார இயக்க மேலாளர் நா.மும்தாஜ் பேகம், வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி,ஊராட்சி மன்ற செயலாளர் மா.பிச்சையம்மாள் மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர் பா.மோகன சுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.
