திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப படிவமானது வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. 25.07.2023 முதல் 10 நாள் முகாமாக விண்ணப்ப படிவ பூர்த்தி மற்றும் பதிவேற்றமானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இம்முகாமில் விண்ணப்ப படிவம் சரிபார்ப்பதற்கு தன்னார்வலர்களும் பதிவேற்றம் செய்ய இல்லம் தேடி கல்வி ஆர்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் தலைமையில், தன்னார்வலர்கள் சின்னமணி, சரண்யா மற்றும் ராஜலட்சுமி மேலும் இல்லம் தேடி கல்வி ஆர்வலர்கள் ஆரோக்கிய செல்வி சவேரியம்மாள் மற்றும் இருதய மேரி ஆகியோர் முகாமின் மூன்றாம் நாளான இன்று விண்ணப்ப படிவ பூர்த்தி மற்றும் பதிவேற்ற பணிகளைசெய்கின்றனர்.
