தமிழ்நாடு காவல்துறை சார்பாக…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோட்டம் அளவிலான மக்கள் குறைதீர்க்கும் முகாமானது நடைபெற்றது.

இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)சாமிநாதன் IPS தலைமை தாங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா (DSP)
பங்கேற்றார்.

பல்லடம் தாலுகா சார்ந்த அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களும், துணை காவல் ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்ட எஸ்பி அவர்கள் மக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்று விசாரணை செய்தார். இதில் ஏராளமான மக்கள் பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் நேரடியாக விசாரணை நடைபெற்றதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.
