விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டதை ஒட்டி புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் கர்ம வீரர் காமராசர் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செயலாளராக மைதீன் பாவா, கிழக்கு மாவட்ட செயலாளராக தமிழ் முகம், மைய தெற்கு மாவட்ட செயலாளராக தமிழரசன், மேற்கு மாவட்ட செயலாளராக திருவளவன், மண்டல செயலாளராக தமிழ்வாணன் மற்றும் மண்டல துணைச் செயலாளராக அன்பரசு ஆகியோருக்கு நிர்வாக பொறுப்புகள் அளிக்கப்பட்டன.

கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
