புனித இலொயோலா பெருவிழாவை முன்னிட்டு, புனித வளனார் மருத்துவமனை திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் இணைந்து புனித மரியன்னை மேல்நிலை மற்றும் ஆரம்ப பள்ளியின் இந்நாள் முன்னாள் ஆசிரியர்கள் அவர்தம் குடும்பத்திற்கான இலவச இதய பரிசோதனை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் நாட்டாண்மை காஜா மைதீன் ஆகியோர் மருத்துவ முகாமை துவங்கி வைத்தனர்.

டாக்டர் ஆனந்த் இதய நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் மற்றும் மருத்துவர் ஐஸ்வர்யா பொது மருத்துவர் ஆகியோர் சிறப்பு மருத்துவர்களாக கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமினை மதர் தெரசா லையன் சங்கத் தலைவர் பிரபாகரன், பொருளாளர் கஷ்மீர் அருண், செயலாளர் மணிப்பாண்டி, சைலேந்திரராய் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
