திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புத்தாக்கப் பயிற்சிக்கூட்டமானது திண்டுக்கல் மாவட்டம் நூற்றாண்டு நினைவு நகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக “வெந்துகில் வேந்தர்” எம் ஜே எப் தங்கராஜ், முன்னாள் மாவட்ட ஆளுநர் கலந்து கொண்டு புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் உரையை நிகழ்த்தினார்.

எம் ஜே எஃப் திபூர்சியஸ், புரவலர், லயன் ராஜா, மண்டல தலைவர் லயன் மருத்துவர் அமலா தேவி,வட்டாரத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து பரிசளித்து மரியாதை ய்தனர்.

மேலும் நூற்றாண்டு நகராட்சி பள்ளியின் கழிவறைகளை புதுப்பித்து காஸ்மாஸ் லையன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுடன் சிறப்பு விருந்தினர் கழிவறைகளை திறந்து வைத்தார்.
