இந்திய மருத்துவ சங்கம் திண்டுக்கல் பெண்(கிளை) சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் திண்டுக்கல் சென்ட்ரல் இணைந்து உலக தாய்ப்பால் வாரமானது புனித வளனார் மருத்துவமனை திண்டுக்கலில் சிறப்பிக்கப்பட்டது.

இதில் புனித வளனார் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாக்கியமேரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய மருத்துவ சங்க தலைவர் மரு. மகாலட்சுமி, செயலர் மரு. ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, பெண்கள் கிளை தலைவர் மரு. அமலா தேவி, புனித வளனார் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவ தலைவர் செல்வராணி, ரோட்டரி கிளப் தலைவர் முஹம்மது அஸ்மத், செயலர் திருமலை முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மருத்துவர் அமலா தேவி மற்றும் செல்வராணி கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் பயனளிக்கும் வகையில் விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினர்.

புனித வளனார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கும் மாணவிகளுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அவசியத்தை தெளிவாக விளக்கினர்.

மருத்துவமனையில் உள்ள பிரசவித்த தாய்மார்களுக்கு தேவையான பொருட்களை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பரிசளித்தனர். இந்நிகழ்வினை மரு. ஜோசப் கிறிஸ்டோபர் பாபு ஒருங்கிணைத்தார்.
