திண்டுக்கல் ரத்தினம் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரி கேம்பஸ் லயன்ஸ் மற்றும் ஜி டி என் மெடிக்கல் லியோ சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவானது ஜி டி என் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் காஸ்மாஸ் லையன்ஸ் சங்க, புரவலர் திபூர்ஷியஸ், சேவை திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். வட்டாரத் தலைவர் லயன் அமலா தேவி சிறப்புரையாற்றினார்.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும், அரிசி மூட்டைகளும்வழங்கப்பட்டன. மேலும் முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரிபரமேஸ்வரன் புதிய நிர்வாகிகளையும் புதிய உறுப்பினர்களையும் பதவியில் அமர்த்தினார்.

திண்டுக்கல் ரத்தினம் லயன்ஸ் சங்க தலைவராக லயன் முருகானந்தம், செயலாளராக லயன் அரவிந்த் மற்றும் பொருளாளராக லயன் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஜி டி எம் கலை கல்லூரி கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், மண்டல தலைவர் ராஜா மற்றும் துணை முதல்வர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here