திண்டுக்கல் மாநகராட்சியில் இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்கும் முகாமானது நடைபெறுகிறது.
முதல் கட்டமாக கடந்த மாதம் பத்து நாட்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட விண்ணப்பதிவானது திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து, இரண்டல்லை பாறை, ஆர் எம் டி சி காலனி பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் ஒரு நாளைக்கு சுமார் 180 விண்ணப்ப படிவங்கள் ஒரு முகாமல் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இரண்டல்லை பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி ஆர்வலர்கள் சிவபாரதி, கிறிஸ்டினா, பிரியா மற்றும் தன்னார்வலர் சங்கீதா ஆகியோர் பதிவேற்றம் செய்யும் முறையை தோட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் பார்வையிடுகிறார்.
