இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பானது கொடைக்கானலில் நடைபெற்றது. இந்த ஆண்டு 2023 தேசிய அளவிலான மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு முறையே அகமதாபாத் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தென் மண்டல துணைத் தலைவர் மாநாடு கொடைக்கானலில் ஹோட்டல் கோடை இன்டர்நேஷனல் கருத்தரங்கு ஆகஸ்ட் 11 ,12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு இம்மாநாட்டின் அமைப்பு தலைவர் டாக்டர் ஜோதி சுந்தரம் அனைவரையும் வரவேற்றுபேசினார். தென் மண்டல துணைத் தலைவர் மற்றும் அமைப்பு தலைவர் டாக்டர் எஸ். சம்பத்குமாரி துணைத் தலைவர் உரையாற்றினார்.

FOGSI தலைவர் டாக்டர் ஹிரிஷிகேஸ் டி பை மாநாட்டு தலைமை உரையாற்றினார். FOGSI பொதுச் செயலாளர் டாக்டர். மாதிரி படேல் பொதுச்செயலாளரின்உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு தகவல் தொழிற்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக FOGSI தலைவர் டாக்டர் ஹி ஷிரிஷிகேஷ் டி பை அவர்கள் தலைமையில் மாநாட்டின் நினைவாக மாநாட்டின் வளாகத்தில்மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து மகப்பேறு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் தலைசிறந்த மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் உட்பட சுமார் 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
