77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழாவானது தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக 77 வது வார்டில் சுதந்திர தின விழாவானது தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் தனபாண்டி தலைமை தாங்கினார், பொருளாளர் ஆனந்த் மற்றும் கோபி கண்ணன், பிரசாந்த் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சதாசிவம் பிள்ளை தேசிய கொடியை ஏற்றினார்.

ஆசாரி,வேல்மணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மழலைகளுக்கு எழுதுகோல் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழாவானது சிறப்பிக்கப்பட்டது.

திண்டுக்கல் ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 77 வது சுதந்திர தினமானது பள்ளிக் குழந்தைகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.பள்ளியில் குழந்தைகளுக்காக பேச்சுப்போட்டி ,மாறுவேட போட்டி, என பல போட்டிகளும் நடத்தப்பட்டன. குழந்தைகள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

விழாவிற்கு முன்னாள் கடற்படை தளபதி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் நரசிங்க சக்தி முன்னிலை வகித்தார். முதல்வர் லதா மற்றும் நிர்வாக அதிகாரி அகிலன் வாழ்த்துரை வழங்கினார்.
