திண்டுக்கல் மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின விழாவானது காஸ்மாஸ் லையன்ஸ் சங்கம் சார்பில் பிலோமினாள் நடுநிலைப்பள்ளி, மேட்டுப்பட்டியில் கொண்டாடப்பட்டது.
காஸ்மாஸ் லயன்ஸ் சங்க இயக்குனர் வீரமார்பன் நமது தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
புரவலர் எம் ஜே எப் வழக்கறிஞர் திபூர்ஷியஸ், வட்டாரத் தலைவர் மருத்துவர் அமலா தேவி, கிரீன் வேலி பள்ளி தாளாளர் முகமது காசிம் வாழ்த்துரை வழங்கினர்.
செயலர் பாபி மாலா ராமமூர்த்தி மற்றும் பொருளாளர் சேவியர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தலைமை ஆசிரியர் சகோதரி கரோலினா மற்றும் தாளாளர் சகோதரி ஆரோக்கிய செல்வி கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர் அமலா தேவி பள்ளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் ஆனது நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான மருந்து பொருட்களும் வழங்கப்பட்டன.
