குஜராத் மாநிலம் போபால் நகரில் தேசிய அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி போட்டி வரும் 22ந் தேதி முதல் 27 ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் தமிழக அணி கலந்து கொள்கிறது. இந்த தமிழக ஹாக்கி அணிக்கு
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மாணவர் செல்வன் எம்.எஸ்வந்த் (12ஆம் வகுப்பு)தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரை பாராட்டி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர், அருள்முனைவர். எஸ். அருள்தாஸ் சே. ச, தலைமை ஆசிரியர் அருள் பணி, எம். ஆரோக்கியதாஸ் சே. ச , உடற்கல்வி இயக்குனர் திரு எஸ். விக்டர் ராஜ் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் திரு, என். எம். பி. காஜா மைதீன், துணைத் தலைவர்கள் திரு ஞான குரு , ராஜசேகரன்,செயலர் திரு எஸ். ராமானுஜம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் வாழ்த்துக்களை பெற்றார்.
