ஆசிரியர் தினம், மருத்துவர் தினம், வழக்கறிஞர் தினம், பொறியாளர் தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் என்று ஐம்பெரும் விழாவை திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சிறப்பித்தது.

வத்திகான் உச்சநீதிமன்ற நீதிபதி சேவியர் லியோ ஆரோக்கியராஜ் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவின் அனைத்து செயல்பாடுகளையும் திட்டமிடுதலையையும் புரவலர் வழக்கறிஞர் திபூர்ஷியஸ் மிகச் சிறப்பாக செய்திருந்தார். தலைவர் செல்வ விக்னேஷ் தலைமை வகித்தார்.

செயலாளர் பாபி மாலா ராமமூர்த்தி மற்றும் செல்வராணி, பொருளாளர் சேவியர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இவ்விழாவில் மருத்துவத்துறை ஓய்வு இணை இயக்குனர் மருத்துவர் அமலா தேவி, நாட்டாண்மை காஜாமைதீன், வழக்கறிஞர் சூசை ராபர்ட், கட்டட பொறியாளர்கள் தொண்டு அறக்கட்டளை செயலர் பெஞ்சமின் ஆரோக்கியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கும், மருத்துவத் துறையில் சாதனை படைத்த மருத்துவர்களுக்கும், நீதியை காக்கும் வழக்கறிஞர்களுக்கும், சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்களுக்கும் மற்றும் பொறியாளர்களுக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி வழங்கப்பட்டன. முதல் தலைமுறை கல்லூரி மாணவருக்கு ரூபாய் 10,000 நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.
