திண்டுக்கல் குத்துச்சண்டை அகாடமி மற்றும் புனித ஜான்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர் என் எம் பி காஜா மைதீன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் குத்துச்சண்டை அகாடமி செயலர் நாட்டாண்மை கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

குத்துச்சண்டை அகாடமி துணைத் தலைவர் ஞானகுரு முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா அனைத்து வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

தடகள பயிற்சியாளர் சந்திரசேகர் மற்றும் துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் சங்க சட்ட ஆலோசர்கள் இரட்டை வழக்கறிஞர்கள் அஜய் மற்றும் விவேக் வாழ்த்துரை வழங்கினர். ஜான்ஸ் அகாடமி நிறுவனர் ஜான் ஆரோக்கியசாமி நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் மாநில, மாவட்ட அளவில் சாதனை புரிந்த 18 சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
