
திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் சங்க நிர்வாகிகள் தேர்வு, பொதுக்குழு கூட்டம் வழக்கறிஞர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் தலைவராக ரத்தினம், துணைத் தலைவராக துரை ரத்தினம் மற்றும் சிவக்குமார், செயலாளராக ராஜசேகர், உதவி செயலாளராக துரைராஜ், பொருளாளராக அருண்குமார், செயற்குழு உறுப்பினராக ஞானகுரு, வெங்கடேசன், ஜீவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

16.10.2023 அன்று 10.30 மணியளவில் ஜி டி என் கல்லூரியில் ஹேண்ட்பால் நடுவர்களுக்காக தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது விபரங்களை 12.10.2022 தேதிக்குள் செயலர் ராஜசேகர் அவர்களிடம் தபால் மூலமாகவோ தொலைபேசி(94441 20045) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி அணிகள், பள்ளி அணிகள் மற்றும் கிளப்புகள் இந்த (2023-2024) ஆண்டுக்கான சங்கத்தில் பதிவு செய்யும் அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில தேசிய அளவிலான ஹேண்ட் பால் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
