தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்கம், இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் 48வது தமிழ்நாடு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்-2023 மற்றும் 33வது தமிழ்நாடு யோகா தரவரிசை சாம்பியன்ஷிப் – 2023 42வது தமிழ்நாடு யோகா குழு தேர்வு – 2023 பழனி ஸ்ரீ ஷுண்முக சேவா சங்க மகாலில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்றார்கள்.இதில் திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளி நான்காம் வகுப்பு மாணவன் காட்வின் பிரிட்ஜோ மாநில அளவில் தகுதி தேர்வு பெற்றுள்ளார்.

இப்பள்ளியை சேர்ந்த 26 மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்தனர். தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ராமலிங்கம் மற்றும் பள்ளியின் முதல்வர் அவர்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இத்தேர்வினை தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்கம் தலைவர் டி.வி. மதன்குமார்,கரிகாலன் செயலாளர் ,மாரியப்பன் பொதுச் செயலாளர், ஆகியோர்கள் தேர்வு செய்து மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினார்கள்.
