மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட துப்பாக்கிச் சூடும் போட்டிக்கு தமிழக அணிக்கு திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் கே. ஸ்ரீபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரைப் பாராட்டி திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாவட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி கழக நிறுவனர் வீரமணி, ரைஃபில் அகாடமி செயலாளர் ஞானகுரு, பள்ளியின் தாளாளர் அருள்தாஸ்,தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் விக்டர்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
