திண்டுக்கல் காஸ்மாஸ் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள புனித பிலோமினாள் நடுநிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் ஆதவன் புட்ஸ் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .

காஸ்மாஸ் லயன்ஸ் சங்க முதன்மை ஆலோசகர் திபூர்சியஸ், வட்டாரத் தலைவர் ராஜா, திருவருட்பேரவை பொருளாளர் சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜாமைதீன் மற்றும் 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமலோற்பவ மேரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இம் முகாமிற்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லையன்ஸ் சங்கத் தலைவர் செல்வ விக்னேஷ் தலைமை தாங்கினார். காஸ்மாஸ் லையன்ஸ் சங்க செயலாளர் பாபி மாலா ராமமூர்த்தி, செல்வராணி, பொருளாளர் சேவியர் துரைராஜ் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்புரை, சர்க்கரை நோய் உள்ளவர்களின் கண் விழித்திரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகள் கண் நோய், கிட்டப்பார்வை,தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற நோய்களை கண்டறிந்து சிகிச்சை பெற்றனர்.
