புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி பட்டறையானது நடைபெற்றது. கல்லூரி செயலாளர் அருட் சகோதரி அருள்தேவி அவர்கள் , கல்லூரி முதல்வர் டாக்டர் மேரி பிரமிளா சாந்தி அவர்கள், கல்லூரியின் கல்வி சார் இயக்குனர் டாக்டர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

பயிற்சி பட்டறையில் திருச்சி ஆசை ஃபுட் புரடக்ட்ஸ் மகளிர் தொழில் நுட்ப நிறுவனத்தை சார்ந்த யோக சித்ரா சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடம் இயற்கை மூலிகைகளான துளசி வேம்பு கற்றாழை ஆகியவற்றின் பயன்களை எடுத்துக் கூறியதுடன் அதில் ஆரோக்கியமான நாப்கின் செய்முறை பயிற்சியினை சிறப்பான முறையில் செய்து காட்டினார். இப்பட்டறையில் 75 மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சிபட்டறையினை கல்லூரியின் கணினி துறை பேராசிரியர் முனைவர் யோக தாரணி மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் உமா மகேஸ்வரி அவர்களும் ஒருங்கிணைத்தனர்.
