திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக சமய நல்லிணக்கத்தோடு கூடிய தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மருத்துவர் செல்வராணி மற்றும் பாபி மாலா , பொருளாளர் சேவியர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது துணைவியார் கவிதா தேவி இணைந்து நலத்திட்ட சேவைகளை துவங்கி வைத்தனர். ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முதியோர் இல்லங்கள் மற்றும் பார்வை இழந்தோருக்கு மளிகை பொருட்களாகவும், நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடையாகவும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காஸ்மாஸ் அரிமா சங்க புரவலர் திபூர்சியஸ், திருவருட் பேரவையின் பொருளாளர் நாட்டாண்மை காஜாமைதீன், அரசன் குரூப்ஸ் நிறுவனர் சண்முகம், வட்டாரத் தலைவர் அமலா தேவி ஆகியோர் கலந்து கொண்டு நல்ல திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் சாதனை புரிந்தவர்களுக்கும், மாநில அளவில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த பான் செக்கர்ஸ் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
