திண்டுக்கல் S.M.B மெட்ரிக் பள்ளியில் பயிலும் 11 வது வகுப்பு படிக்கும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் கோயம்புத்தூரில் நடந்த தேசிய தடகள போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் நீளம் தாண்டுதலில் 39.7 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்து தங்க பதக்கம் பெற்றார்.

இவரை முன்னாள் கால்பந்து வீரர் இராஜேந்திரகுமார் பாராட்டி உதவித்தொகை வழங்கினார். V. G ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஞானகுரு தலைமையிலும் திண்டுக்கல் குத்துச்சண்டை அகாடமி தலைவர் ஜான் ஆரோக்கியசாமி, திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் துணைத் தலைவர் பரந்தாமன் தடகளப் பயிற்சியாளர் சந்திரசேகரன் பாராட்டி வாழ்த்தினார்கள்.

கடந்த 2015 ஆம் வருடம் முதல் 2023 வரை தேசிய, மாநில அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தெற்காசிய தடகள போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here