திண்டுக்கல் காஸ்மாஸ் லையன்ஸ் சங்க சமய நல்லிணக்க கிறிஸ்து பிறப்பு பெருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா2024 தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் புரவலர் மற்றும் முதன்மை ஆலோசகர் திபூர்சியஸ், மண்டல தலைவர் ராஜா மற்றும் வட்டாரத் தலைவர் அமலா தேவி வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நாகா குரூப் நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன், பாதாள செம்பு முருகன் சுவாமிகள், திண்டுக்கல் மறை மாவட்ட பொருளாளர் சாம்சன், திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு சகாயராஜ், திருவருட் பேரவை பொருளாளர் நாட்டாண்மை காஜாமைதீன் மற்றும் திருவருட் பேரவை செயற்குழு உறுப்பினர் நாசர்கான் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு 20 பெண்மணிகளுக்கு புத்தாடையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன தாயின் நான்கு குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் 15 ஆயிரம் ரூபாய் ரொக்க தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் தேசிய அளவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி கால்பந்தாட்ட அணிக்கு விருது வழங்கப்பட்டு சிற்றபிக்கபட்டது. மேலும் விழாவானது முதல் உதவி தலைவர் விஜயகுமார், செயலாளர் பாபிமாலா மற்றும் செல்வராணி, பொருளாளர் சேவியர் துரைராஜ் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here