தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 60 ஆண்டு நிறைவு பெறுவதை ஒட்டி டிசம்பர் 22 மற்றும் 23 தேதிகள் சென்னையில் வைர விழா ஆண்டு மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வட்ட மாவட்ட மாநாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் வட்ட கிளைகளில் மாநாடுகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிச்சாண்டி பில்டிங்கில் வட்டக்கலை மாநாடு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் துவக்க உரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் விஜயராகவன் தலைமை உரையாற்றினார்.

சங்க உறுப்பினர்கள் பலர் வாழ்த்துரை தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் சுகந்தி நன்றியுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here