இளையோர் பெண்களுக்கான ஹேண்ட் பால் தேசிய போட்டிகளுக்கான தேர்வு திண்டுக்கல் ஜி டி என் கலைக் கல்லூரியில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்கத்தின் தலைவராக முனைவர் துரை ரெத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவரை திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாமை காஜா மைதீன், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் சண்முகம், தேசிய ஹாக்கி வீரர் ஞானகுரு, கேரம் சங்கத் தலைவர் சுவாமிநாதன், சூட்டிங் சங்கத் தலைவர் வீரமணி மற்றும் பல்வேறு மாவட்ட சங்கங்களை சார்ந்த தலைவர்கள், செயலாளர்கள் பாராட்டினார்கள்.

தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்கத்தின் தலைவர் முனைவர் துரை ரெத்தினம் இந்திய ஹேண்ட் பால் சம்மேளத்தின் 45 ஆவது இளையோர் பெண்களுக்கான ஹேண்ட்பால் தேசிய போட்டிகள் பீகாரில் நடைபெற உள்ளது.

இதற்கான தமிழக அணை வீராங்கனைகளின் தேர்வு திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் தலைவர் முனைவர் ரெத்தினம் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரியில் வரும் ஏழாம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பங்கு கொள்ள விரும்பும் மாணவிகள் தங்களது ஆதார் அட்டை சிறப்பு சான்றிதழ் பத்தாம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றுடன் தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்கத்தின் செயலாளர் முனைவர் ராஜசேகர் அவர்களை 94441 20045 – ல் தொடர்பு கொண்டு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here