திண்டுக்கல் காஸ்மஸ் லயன்ஸ் சங்க தமிழர் திருநாள் மற்றும் லியோ சங்கத் துவக்க விழாவானது புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் கல்லூரி முதல்வர் மேரி பிரமிளா சாந்தி தலைமை வகித்தார்.

புரவலர் வழக்கறிஞர் திபூர்ஷியஸ் லியோ சங்கத்தை துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் அருள் தேவி, மண்டல தலைவர் ராஜா மற்றும் வட்டார தலைவர் அமலா தேவி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் திருவருட் பேரவையின் பொருளாளர் நாட்டாண்மை காஜா மைதீன் சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் காந்திகிராம தியான பயிற்சியாளர் சாவித்திரி பாபு தலைமை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் முதல் உதவி தலைவர் விஜயகுமார் செயலாளர் மரு. செல்வராணி மற்றும் பொருளாளர் சேவியர் துரைராஜ் நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மூன்று மதங்களையும் சார்ந்த ஆறு கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here