திண்டுக்கல் ஜனவரி 11

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சை பெற புதுப்பிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி திறந்து வைத்தார்.

மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி மற்றும் துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு உடன் இருந்தனர்.

பத்து படுக்கையில் கொண்ட இப்பிரிவில் பிராணவாயு, செயற்கை சுவாச கருவி மற்றும் நோயாளிகளுக்கு தேவையான இதர வசதிகளும் உள்ளன இப்பிரிவில் மார்பக புற்றுநோய்‌‌, இரைப்பை புற்றுநோய், வாய் புற்று நோய் மற்றும் இதர புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு ஹீமோதெரபி வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அதிகாரி, அனைத்து துறை பேராசிரியர்கள், இணை மற்றும் துணை பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here